ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரபல இளம் வழக்கறிஞர் பாபர் காத்ரி, ஹவால் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த செப்.25ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய ஐந்து பேரை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முனீர் அசிச், தவ்சீப் அகமது, சாஹித் ஷாபி, ஜஹித் பரூக், ஆசிப் பட் ஆகியோர் கைது செய்யப்பட்ட நபர்கள் ஆவர். இவர்கள் வரும் 22ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படவுள்ளனர்.
40 வயதே ஆன இளம் வழக்கறிஞரான பாபர், தொடர்ச்சியாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றும், செய்தித்தாள்களில் முக்கியக் கட்டுரைகளை எழுதி வருபவரும் ஆவார்.
இவரது கருத்துக்களும் செயல்பாடுகளும் பிரிவினைவாதிகளுக்கு பிடிக்காமல் இருந்து வந்த நிலையில், அவர் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்படுவதற்கு, மூன்று நாட்களுக்கு முன்னதாக தன் மீது அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு புகார் ஒன்றை பாபர் அனுப்பியிருந்தார். அப்படியிருக்க, தனது இல்லத்தில் வைத்தே பயங்கரவாத சக்திகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: “எதிர்க்கட்சிகள் பரப்பிவந்த அவதூறுகளை மக்கள் நிராகரித்துள்ளனர்” - தாமஸ் ஐசக்