புதுச்சேரி: நாட்டின் 75-வது சுதந்திர தினம், "அம்ரித் மகோத்சவ்" என்ற பெயரில், 75 வாரங்களுக்கு கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் "அம்ரித் மகோத்சவ்" கொண்டாட்டம் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில், 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரையில் கோடைகால கடற்கரைத் திருவிழா நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். அப்போது வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.
இதில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கடற்கரைத் திருவிழா என்பது ஒரு நல்ல கருத்து என்று தெரிவித்தார். பிரதமர் உருவாக்கிய காற்றாடித் திருவிழா உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்திருக்கிறது. அதேபோல இந்த கடற்கரைத் திருவிழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வர இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார். இந்த கடற்கரைத் திருவிழா நான்கு இடங்களில் நடக்கிறது என்றும், இது மாணவ மாணவிகளுக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நூற்றாண்டுகள் பழமையான கோயில்களை இடிக்கத் தடை