ஐதராபாத் : அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலின் பிரதிர்ஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்நாளை எதிர்நோக்கி தேசமே தயாராகி வருகிறது. அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்தை காணும் வாய்ப்பிற்காக நாடு முழுவதிலும் இருந்து மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த வரலாற்று நிகழ்விற்கான விரிவான தயாரிப்புகளின் குறிப்பிடத்தக்க அம்சமாக, ராமரைக் குறிக்கும் அவரது கால்தடங்களை காட்சிப்படுத்துவதை உள்ளடக்கியது. இந்நிலையில் ராமோஜி பிலிம் சிட்டிக்கு வந்த ஸ்ரீ ராமரின் காலடி தடங்களை நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி, தனது தலையில் சுமந்து வந்து பூஜை செய்தார்.
தொடர்ந்து நிகழ்வில் ராமோஜி குழுமத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். ஐதராபாத்தில் உள்ள போவன்பல்லியைச் சேர்ந்த பித்தம்பள்ளி ராமலிங்க சாரி என்கிற கைவினை கலைஞரால் ராமரின் கால்தடங்கள் உருவாக்கப்பட்டது. ஐந்து உலோகங்களின் கலவையாக வடிவமைக்கப்பட்ட, கால்தடங்கள் 13 கிலோ எடை கொண்டவை.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் போது, இந்த பாதச் சுவடுகள் வழங்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி உள்பட பல்வேறு இடங்களில் இந்த பாதச் சுவடுகள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெகு சிறப்பாக நடந்த நிகழ்வில் ராமோஜி குழுமத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ராமர் பாதச் சுவடுகளை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க : ஜப்பானை மீண்டும் தாக்கிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?