ETV Bharat / bharat

வாக்கு அரசியலா? சமூக நீதி காவலர்களா? அயோத்தி ராமர் கோயில் திறப்பில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? - வீரேந்திர கபூர்

வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதா அல்லது சமூக நீதி காவலர்களாக உருவெடுப்பதா என அயோத்தி ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்குகிறார் மூத்த பத்திரிக்கையாளர் விரேந்தர கபூர்...

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 8:37 PM IST

Updated : Jan 8, 2024, 8:52 PM IST

ஐதராபாத் : அயோத்தி ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதா? அல்லது புறக்கணிப்பதா? என்பது தான் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் தற்போதைய தலையாய பிரச்சினையாக காணப்படுகிறது. ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவி கலந்து கொள்வதாக முடிவெடுத்தால், அதனால் சிறுபான்மையின மக்களிடையே இருந்து வரும் விளைவு என்பது உறுதி.

அதேநேரம், பிரதிர்ஷ்டை விழாவை புறக்கணித்தால் நாட்டின் பெரும்பான்மை மக்களால் மறுதலிக்கப்படலாம். இப்படி இருதலைக் கொள்ளி போன்று தற்போதைய காங்கிரசின் சூழல் அமைந்து உள்ளதாக காணப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் தற்போதைய சூழல் என்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக காணப்பட்டாலும், விடை காண்பது எளிதானது அல்ல என்பது தான் நிதர்சனமான உண்மை.

உண்மையை கூற வேண்டும் என்றால் அயோத்தி ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவுக்கான அழைப்பிதழ் தங்களுக்கு வந்து விடக் கூடாது என்பதே பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாடாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அழைப்பிதழ் அனுப்பாததை காரணம் காட்டி பாஜக கூறித்து பல்வேறு விமர்சனங்களை கூறி கோயில் பிரதிர்ஷ்டை விழாவை அரசியலாக்க திட்டமிட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவை அரசியலாக்குவதாக கூறி முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர். மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் தலைவர் சார்பில் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்கு துணை போக மாட்டோம் எனக் கூறி அவர் புறக்கணித்தார்.

மேலும், மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும் ஆனால் அதை தனது அரசியல் எல்கைக்காக பாஜக பயன்படுத்துவதாக டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சீதாராம் யெச்சூரி தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேக்கி, ராமரின் அன்புக்குரியவர்கள் மட்டுமே அயோத்தி கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியும் என தெரிவித்து இருந்தார்.

ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவை புறக்கணிப்பதால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் என்றும் பிளவு என்பது ஏற்படப் போவதில்லை. மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு உள்ளிட்டவைகளையே தனது அடிப்படை கொள்கைகளாக கொண்டது கம்யூனிஸ்ட் கட்சி. இருப்பினும், மதச்சார்பற்ற கொள்கைகளை மக்களிடையே விதைப்பதில் எது அவர்களுக்கு உதவுகிறது என்றால் பதில் கிடைக்குமா.

இந்தி மொழி பேசும் வடமாநிலங்களில் ராமரை பின் தொடரும் மக்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உள்ள நிலையில், அங்கு கம்யூனிசத்தை பின் தொடரும் அல்லது விரும்பும் மக்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவும் சில இடங்களில் பூஜ்யமாகவும் உள்ளது. அதேநேரம் கேரளாவில் விதிவிலக்காக ஆட்சி கட்டிலை அலங்கரிக்க இந்தியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு மதம் சார்ந்த கட்சிகளுடன் கூட்டணி கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால் இத்தகைய சூழல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதாரணமானது அல்ல. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவில் பங்கேற்பதா? புறக்கணிப்பதா? என்பது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்தி மொழி பேசும் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை போன்று காங்கிரசுக்கும் செல்வாக்கு இல்லை என்றால் எளிதாக ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவை புறக்கணித்து விடலாம்.

அதேநேரம் உண்மையான மதச் சார்பற்ற உரிமைகளை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும். ஆனால் நிலை தற்போது அத்தகைய சூழலுக்கு உகந்ததாக இல்லை. உண்மையான பிரச்சினை என்னவென்றால் அயோத்தி ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவில் பங்கேற்றால் வட மாநிலங்களில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவது என்பது காங்கிரஸ்க்கு சிக்கலை உண்டாக்கும்.

அதேநேரம் பிரதிர்ஷ்டை விழாவை புறக்கணித்தால் இந்துக்களின் எதிரி என காங்கிரஸ் கட்சியை பாஜக அம்பலப்படுத்தும் சூழலும் உருவாகக் கூடும். ஏறக்குறைய கம்யூனிஸ்ட் கட்சியை போன்று காங்கிரசும் ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவை புறக்கணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவில் கலந்து கொள்வதற்கான முடிவை பரிசீலிப்பது குறித்து சிறுபான்மை சமூகத்தினரிடையே காங்கிரஸ் கட்சிக்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறப்படுகின்றன. வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் இஸ்லாமிய சமூக மக்களின் வாக்குகள் சிதறாத வண்ணம் இந்த விவகாரத்தில் அக்கட்சி முடிவு எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து அயோத்தி கோயில் திறப்பு விழா குறித்து அழுத்தம் கிடைக்கப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் வட மாநிலங்களில் உள்ள இந்து வாக்காளர்களின் நிலைப்பாட்டை மென்மையாக கையாளும் விதமாக விழாவில் கலந்து கொள்ளும் நிலைப்பாட்டை காங்கிரஸ் மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பலர் காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் உடல் நலப் பிரச்சினையை காரணம் காட்டி கலந்து கொள்ளப் போவதில்லை என மன்மோகன் சிங் தரப்பில் விளக்கப்பட்டு உள்ளது. இந்துத்துவா கொள்கைகளை கொண்டு வாக்கு அரசியல் நடத்தி வரும் பாஜகவுக்கு, அயோத்தி கோயில் திறப்பு கலந்து கொண்டு காங்கிரஸ் பதிலடி கொடுக்குமா? இந்து மக்களின் மனதில் இடம் பிடிக்குமா என்பதே முக்கியமாக காணப்படுகிறது.

அதற்கு உதாரணமாக அண்மையில் மத்திய பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் கமல்நாத், இந்து மத மக்களை அரவணைத்து செல்லும் வகையில் வாக்குறுதிகளை வழங்கினார். ஆட்சிக்கு வந்தால் ஹனுமனுக்கு கோயில் அமைப்பது, கோயில் கட்டுமான பணிக்கு 5 வெள்ளி செங்கற்களை வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை தெரிவித்தார்.

இருப்பினும், கமல்நாத் அம்மாநில மக்களால் புறக்கணிக்கப்பட்டார் என்பதே நிதர்சனமான உண்மை. முன்னதாக 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இதே போன்று கோயில் நிறுவுவதற்கு அனுமதி அளித்து அதை சுட்டிகாட்டி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய போதிலும், அந்த பொது தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.

போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஜனதா தளத்தின் தலைவர் வி.பி. சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது. கோடிக்கணக்கிலான இந்து மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி கோயில் திறப்பை எதிர்நோக்கி கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை நிலைநிறுத்தப் போகிறதா அல்லது புறக்கணித்து சமூக நீதியின் காவலர்கள் என சிறுபான்மையின மக்களால் போற்றப்பட போகிறதா என்பதை பொருத்து இருந்து பார்க்க வேண்டிய சூழலில் நாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வங்கதேசத்தின் சிறந்த நண்பன் இந்தியா - வங்கதேச பிரதமர் சூளுரையில் அரசியல் என்ன?

Last Updated : Jan 8, 2024, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.