புதுச்சேரி: ஒவ்வொரு ஆண்டும் இந்திய பனோரமா திரைப்பட விழாவை புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் மத்திய அரசு திரைப்பட விழா இயக்குனரகம் இணைந்து நடத்தும்.
இதில், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதினை புதுச்சேரி அரசு வழங்கும். அந்த வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட விருதுக்கு இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கிய தேன் என்ற தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது
இந்நிலையில், நேற்று, தேன் திரைப்படத்தை இயக்கிய கணேஷ் விநாயகனுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் உதயகுமார் வழங்கினார்.
இதையடுத்து வருகிற இன்று 'பிரம்ம ஜனேன் கோ போன் கொம்மோட்டி' என்ற வங்காள மொழி திரைப்படமும், 26 ஆம் தேதி 'சேஃப்' என்ற மலையாளம் திரைப்படமும், 27 ஆம் தேதி 'கதம்' என்ற தெலுங்கு படமும் புதுச்சேரியிலுள்ள கலையரங்கத்தில் திரையிடப்படவுள்ளன.
இந்தத் திரைப்படங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக திரையிடப்படுகிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து படமாகும் வடிவேலு கேரக்டர் - தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சமா?