ராமநகரா(கர்நாடகா): ஜாஹிர் பாஷா(40), ராமநகரா மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டி தொழில் செய்கிறார். இவர் ஆபாசப் படத்திற்கு பெரும் அடிமையாக இருந்து வருபவராகத் தெரிகிறது.
இந்நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பு இவர் பார்த்த ஆபாசப் படத்தில் வந்த பெண், தன் மனைவியைப் போன்ற சாடையில் இருப்பதாக சந்தேகப்பட்ட பாஷா, இதுகுறித்து தன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, வாக்குவாதம் முற்றியதில் தனது குழந்தைகளின் முன்னிலையிலேயே தன் மனைவியைக் குத்திக் கொன்றுள்ளார்.
பாஷாவும் அவரது மனைவியும் 15 ஆண்டுகளாக திருமண வாழ்வில் உள்ளனர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். இதற்கு முன்பே, இவர் தன் மனைவியை திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு பலமுறைத் தாக்கியுள்ளார். அந்தநிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு பாஷா பார்த்த ஆபாசப்படத்தில் வந்த பெண் தன் மனைவியைப்போல் இருப்பதைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து, மிகவும் ஆத்திரம் அடைந்த பாஷா தன் மனைவியை தன் குழந்தைகள் முன்பே குத்திக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து ராமநகரா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வருங்கால கணவரை, கண்ணாமூச்சி ஆட அழைத்து கழுத்தறுத்த பெண்!