ETV Bharat / bharat

இணைய சேவைகளை முடக்கியதற்கு காரணம் என்ன? - மத்திய அரசு விளக்கம் - இணைய சேவை முடக்கம்

கலவரத்தின்போது பதற்றம் நிலவிய நிலையில், அமைதியை நிலைநாட்டவே இணைய சேவைகளை முடக்கினோம் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார்.

மாநிலங்களவை
மாநிலங்களவை
author img

By

Published : Mar 10, 2021, 8:35 PM IST

டெல்லி: இரண்டாம் கட்ட நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு காரணம் என்ன? என இன்று எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, "இணையதளத்தில் பல சவால்களை எதிர் கொள்கிறோம். இணையத்தில் எல்லைகளை கடந்து தகவல்கள் வேகமாக பரவுகின்றன.

அது தவறாக பயன்படுத்தபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பதற்றமான சூழ்நிலையிலும், கலவரத்தின்போதும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொலைத்தொடர்பு சேவைகளையும் இணையத்தையும் சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் முடக்கியுள்ளன. இணைய சேவை முடக்கப்பட்டது குறித்த முழு தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகம் வசம் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: தாக்கப்பட்டாரா மம்தா பானர்ஜி...நந்திகிராமில் பரப்புரையின்போது நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.