ETV Bharat / bharat

Valentines Day: பிரதமருக்கு தங்க முலாம் பூசப்பட்ட ரோஜா பூங்கொத்து பரிசு! - Valentines Day

காதலர் தினத்தையொட்டி சூரத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்க முலாம் பூசப்பட்ட ரோஜா பூக்களை பரிசாக அனுப்பியுள்ளனர்.

பிரதமருக்கு ரோஜா
பிரதமருக்கு ரோஜா
author img

By

Published : Feb 14, 2023, 11:23 AM IST

சூரத்: உலகம் முழுவதும் இன்று (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக காதலர் தினத்தன்று, தாங்கள் விரும்பும் நபர்களுக்கு ரோஜாப்பூவை கொடுத்து அன்பை பரிமாறுவது வழக்கம். அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஆரோ பல்கலைக்கழக மாணவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்க முலாம் பூசப்பட்ட ரோஜா பூக்களை பரிசாக அனுப்பியுள்ளனர். 151 ரோஜாப்பூக்கள் அடங்கிய தங்க முலாம் பூசப்பட்டுள்ள பூங்கொத்து, பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மாணவர் மேஹக் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தான் எங்களது முன்னுதாரணம். மாணவர்கள் மீதான அவரது உணர்வுகள் அனைவருக்கும் தெரியும். காதலர் தினத்தன்று தாங்கள் விரும்பும் நபர்களுக்கு, சிறப்பு பரிசுகளை வழங்குவது இயல்பு. குறிப்பாக இந்த நாளில் நாம் விரும்பும் நபர்களுக்கு ரோஜா பூக்களை வழங்கி அன்பை வெளிப்படுத்துவோம். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்க முலாம் பூசப்பட்ட ரோஜா பூங்கொத்தை வழங்க முடிவு செய்தோம். பெற்றோர் எங்களுக்கு வழங்கும் பணத்தை சேமித்து, இந்த பூங்கொத்தை வாங்கியுள்ளோம்" என்றார்.

நகைக் கடை உரிமையாளர் தீபக் சோக்சி கூறுகையில், "பிரதமர் மோடிக்கு தங்க முலாம் பூசப்பட்ட ரோஜா பூக்களை அனுப்ப உள்ளதாக மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆர்டரை ஏற்றுக் கொண்டோம். பூங்கொத்தை தயாரித்த பின், தங்க முலாம் பூசப்பட்ட பூக்களை மாணவர்களின் கைகளால் வைக்க கூறினோம். அப்போது தான் மாணவர்களின் உணர்வுகளை, பிரதமர் அறிய முடியும்” என்றார்.

இதையும் படிங்க: இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபருக்கு திரும்பிய சுயநினைவு.. சிகிச்சைக்கான பணத்தை திரும்பக்கேட்டு ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.