ETV Bharat / bharat

பழங்குடியின இளைஞர் மது கொலை வழக்கு - 13 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி! - Madhu Murder Case

பழங்குடியின இளைஞர் மது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட 13 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Madhu Murder case
Madhu Murder case
author img

By

Published : Apr 6, 2023, 7:50 AM IST

பாலக்காடு : அரிசி திருடியதாக பழங்குடி இன இளைஞர் மது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரள மாநிலம் அட்டப்பாடி, கடுகுமன்னா என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது.

கடந்த 2018-ம் ஆண்டு அரிசி திருடியதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் மது அடித்து துன்புறுத்தப்பட்டார். கிராம மக்கள் அடித்து துன்புறுத்தியதில் மது படுகாயம் அடைந்தார். தாக்குதல் சம்பவத்தில் போலீசார் தலையிட்டு மதுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய பழங்குடி ஆணையம், சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்சி, எஸ்டி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேரளா காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக வழக்கு விசாரணை கேரள எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

2018-ம் ஆண்டு இந்த வழக்கில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மதுவின் தாய் மற்றும் சகோதரிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நடத்திய கேரள எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான சிறப்பு நீதிமன்றம் 14 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில் அதில் 4வது மற்றும் 11வதாக குறிப்பிடப்பட்டு இருந்த இருவரை நீதிமன்றம் விடுவித்தது. போதிய சாட்சியம் மற்றும் ஆதாரங்கள் இல்லாத காரணத்திற்காக இருவரையும் விடுவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

14 பேர் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்.5 இறுதி கட்ட தீர்ப்பு வழங்க உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று (ஏப்.5) இந்த வழக்கில் நீதிபதிகள் இறுதி கட்ட தீர்ப்பை அறிவித்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 13 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராத்ம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

ஹூசைன் மெச்சேரி, மாரகார், சம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபு பக்கர், சித்திக், உபைத், நஜீப், ஜைஜுமன், சஜீவ், சதீஷ், ஹரிஷ், பிஜூ ஆகியோருக்கு இந்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிக்கையில் 4 வதாக சேர்க்கப்பட்ட அனீஷ் மற்றும் 11வது நபர் அப்துக் கரீம் ஆகியோர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Padma Awards 2023 : முலாயம் சிங் யாதவ், சுதா மூர்த்தி, கீரவாணிக்கு பத்ம விருது வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.