ETV Bharat / bharat

புத்தாண்டு அன்று வித்தியாசமான சாதனை படைத்த இந்தியா!

ஜெனிவா: புத்தாண்டு அன்று உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

குழந்தை
குழந்தை
author img

By

Published : Jan 5, 2021, 10:03 PM IST

புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் 3,71,500 குழந்தைகள் பிறந்தன. அதில், அதிகபட்சமாக இந்தியாவில் 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு கணித்துள்ளது. 2021ஆம் ஆண்டின் முதல்நாளின் முதல் குழந்தை தெற்கு பசிபிக் நாடான பிஜியில் பிறந்துள்ளது. முதல் நாளின் கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது.

அதில், 50 விழுக்காடு குழந்தைகள் குறிப்பிட்ட 10 நாடுகளில் பிறந்துள்ளது. இந்தியாவில் 59,995, சீனாவில் 35,615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேஷியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006 குழந்தைகள் பிறந்துள்ளன. மொத்தமாக, இந்தாண்டு 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் என யுனிசெப் கணித்துள்ளது. அதன் சராசரி ஆயுள் 84 ஆண்டுகளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா ஃபோர் கூறுகையில், "இன்று பிறந்த குழந்தை ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட வேறுபட்ட உலகுக்கு வந்துள்ளது. புதிய கருத்தாக்கத்தை வடிவமைக்க இந்தப் புத்தாண்டு புதிய வாய்ப்பளித்துள்ளது.

அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான, சிறந்த ஆண்டாக இதனை உருவாக்க உலக நாடுகளுக்கு வேண்டுகோள்விடுக்கிறேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.