ETV Bharat / bharat

5 மாநில தேர்தல்: பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை நீட்டிப்பு! - பேரணிக்கு தடை நீட்டிப்பு

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜன.22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

5 மாநில தேர்தல்
5 மாநில தேர்தல்
author img

By

Published : Jan 16, 2022, 6:45 AM IST

டெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜன.22ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை ஜன.8 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே நாளில், ஒமைக்ரான் மற்றும் கோவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஜன.15 வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்.10ஆம் தேதி நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் களம் காண்கிறார். பஞ்சாப் முதலமைச்சர் சரண் ஜித் சிங் சன்னி சாம் கவுர் ஷாகிப் தொகுதியில் போட்டியிடுகிறார். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சோட் மொகா தொகுதியில் நிற்கிறார்.

உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா சீரது தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Sexual harassment: கேரள விமான நிலைய அலுவலர் பணியிடைநீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.