ETV Bharat / bharat

ராஜீவ் காந்தி நினைவு தினம்... தந்தை நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி! - rajeev gandhi

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

rahul
ராகுல் அஞ்சலி
author img

By

Published : May 21, 2021, 1:46 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று(மே.21) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் அவரது உருவப்படங்கள், உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில், அவரது மகனும், எம்பியுமான ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் பல்வேறு தலைவர்களும் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர்.

மேலும், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தந்தையை நினைவுக்கூறும் விதமாக, அவரது புகைப்படத்தைப் பதிவிட்டு, 'உண்மை, இரக்கம், முன்னேற்றம்' " என பதிவிட்டுள்ளார்.

rahul
ராகுல் ட்வீட்

சமூக வலைத்தளங்களில் பலரும் ராஜீவ் காந்தி குறித்த நினைவுகளை நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.