அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தி ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர் அகில் கோகாய் வெற்றிபெற்றுள்ளார். சமூக செயற்பாட்டாளரான இவர் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
சிவ்சாகர் தொகுதியில் போட்டியிட்ட அகில் கோகாய் 57,173 வாக்குகள் பெற்ற நிலையில், எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளர் சுபமித்ரா கோகாய் 45,394 வாக்குகளே பெற்றார். காங்கிரஸ் வேட்பாளருக்கு 19,323 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளருக்கு பிரதமர் மோடியே பரப்புரை செய்த நிலையில், அகில் கோகாய் சிறையிலிருந்ததால் ஒருநாள்கூட பரப்புரை செய்ய முடியவில்லை என்பதே இதில் கவனிக்கத்தகுந்த அம்சமாகும்.