ETV Bharat / bharat

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆன்லைன் மதுவிற்பனை தொடக்கம்

author img

By

Published : Jul 23, 2021, 6:58 PM IST

கெளகாத்தி (அஸ்ஸாம்): அஸ்ஸாம் மாநிலத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு, ஆன்லைன் மதுவிற்பனையை அம்மாநிலத்தலைநகர் கெளகாத்தியில் தொடங்கியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆன்லைன் மதுவிற்பனை தொடக்கம்
அஸ்ஸாம் மாநிலத்தில் ஆன்லைன் மதுவிற்பனை தொடக்கம்

இதுகுறித்து அஸ்ஸாம் மாநில தலைமைச் செயலாளர் ராஜேஷ் பிரசாத் இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், 'முதல் தவணையாக அஸ்ஸாம் மாநிலத்தில் தலைநகர் கெளகாத்தியில் மட்டும் ஆன்லைன் மதுவிற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப்பரவலைக்கட்டுப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றமும் இதுதொடர்பாக, ஆன்லைன் விற்பனை உட்பட எந்தவொரு வகையிலும் மதுவிற்பனை செய்யக்கூடாது எனத் தெரிவித்தது.

முன்னரே பிறமாநிலங்களில் ஆன்லைன் மது விற்பனை

ஆனால், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகா, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் முன்னரே ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டு, மது பாட்டில்கள் வீடுகள்தோறும் டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அஸ்ஸாம் கலால் விதிகளில் திருத்தம்(2021) செய்யப்பட்டு, ஆன்லைன் மது விற்பனை மற்றும் டோர் டெலிவரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தகுதிவாய்ந்த சில்லறை விற்பனையாளர்கள், இதுதொடர்பான அரசின் செயலியில் பதிவு செய்து, முறையான உரிமம், இருப்பிட வளாகம், டெலிவரி செய்யும் நபர்களின் பெயர்ப் பட்டியல், முகவரி, தொலைபேசி எண், புகைப்படங்கள் மற்றும் சில குறிப்புகளை அதில் இணைக்க வேண்டும்.

அதேபோல், மதுவை வாங்க நினைக்கும் நபர்கள் அதற்குரிய வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை அரசின் செயலியில் பதிவு செய்வது கட்டாயம். இதன்மூலம் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர் 3 லிட்டர் வரை மொத்தமாக மதுவை வாங்கிக் கொள்ள முடியும்.

ஆன்லைன் மதுவிற்பனை விதிமுறைகள்

ஊரடங்கினால் வீடுகள்தோறும் மதுவிற்கான ஆன்லைன் டெலிவரி காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

மதுவிற்கான ஆர்டர் செய்த 2 மணி நேரத்திற்குள் அது டெலிவரி செய்யப்பட்டுவிடும். அதேபோல், அரசு குறிப்பிட்ட விற்பனை விலையைவிட அதிகமாக விற்றால், அந்த விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் 1 கிலோ மீட்டருக்கு குறைவான தூரத்தில் டெலிவரி இருக்கும் பட்சத்தில் அதன் கட்டணத்தொகையாக ரூ. 50ம், 2 கிலோ மீட்டர் தூரத்தில் டெலிவரி இருந்தால், ரூ.75ம் கட்டணத்தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், டெலிவரி செய்பவர்களும் கரோனா தடுப்பு வழிகாட்டுநெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் குழு உருவாக்கி மது விற்பனை: அட்மின்கள் இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.