அசாம்: அசாம் மாநிலம் கர்பி அங்லாங்கில் தீவிரவாத அமைப்பான ஐக்கிய மக்கள் புரட்சிகர முன்னணியுடன் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளை அம்மாநில காவல்துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். மேலும், இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய அசாம் காவல்துறை இயக்குநர், "கர்பி அங்லாங்கில் தீவிரவாதிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் இடைவிடாத துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாகவும், இந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 பேர் காயம்