கவுகாத்தி: நாட்டையே உலுக்கிய டெல்லி ஷரத்தா வாக்கர் கொலை சம்பவம் போல் அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு சம்பவம் கொலை அரங்கேறி உள்ளது. இந்த முறை கொலை செய்து உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டியது காதலன் அல்ல, மனைவி என்கிற அதிர்ச்சிகர தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கவுகாத்தி, நரேங்கி பகுதியைச் சேர்ந்தவர் அமர்ஜோதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்தனா கலிட்டா என்பவரைத் திருமணம் செய்து உள்ளார். தம்பதியின் திருமண வாழ்க்கை நன்றாகச் சென்று கொண்டு இருந்த நிலையில், வந்தனாவுக்கு வேறு சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வந்தனா - அமர்ஜோதி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் மற்றும் மாமியார் சங்கரி ஆகியோருக்கு சொந்தமாக 5 கட்டடங்களில் உள்ள நிலையில், அதன் லட்சக்கணக்கான வாடகை ரூபாயை அமர்ஜோதியின் தாய்மாமா வசூலித்து வங்கியில் செலுத்தி வந்துள்ளார்.
இந்த பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட வந்தனா, தனது மாமியார் மற்றும் கணவர் அமர்ஜோதி ஆகியோரை தகாத உறவில் அறிமுகமான ஆண் நண்பர்களின் உதவியுடன் அடுத்தடுத்து கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உள்ளார். மேலும் அவர்களது வெட்டப்பட்ட உடல் பாகங்களை பாலித்தீன் பைகளில் கட்டி ஊருக்கு ஒதுப்புறம் உள்ள பள்ளங்களில் வீசி உள்ளார்.
இதையும் படிங்க: பணியில் இருந்த ரயில்வே பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - கேரள இளைஞர் கைது!
இரண்டு கொலைகளை அரங்கேற்றிய வந்தனா கடந்த 7 மாதங்களுக்கு முன் தன் கணவர் மற்றும் மாமியார் காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காணாமல் போனதாக கொலை செய்யப்பட்ட அமர்ஜோதி மற்றும் சங்கரியை போலீசார் தேடி வந்துள்ளனர்.
இதனிடையே அடுத்த சில நாட்களில் மற்றொரு புகார் ஒன்றை தாக்கல் செய்த வந்தனா, அதில் தனது மாமியாருக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில், அவரது தம்பி கையாடல் செய்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வந்து உள்ளனர். இதனிடையே போலீசாரின் விசாரணையில் வங்கிக் கணக்கிலிருந்து வந்தனா 5 லட்ச ரூபாய் பணம் எடுத்தது தெரிய வந்தது.
வந்தனா மீது சந்தேகித்த போலீசார், அவரை கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பணத்திற்காக ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவர் மற்றும் மாமியாரை கொலை செய்ததை வந்ததனா ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாலித்தீன் பைகளில் கட்டி வீசப்பட்ட அமர்ஜோதி மற்றும் சங்கரியின் உடற்பாகங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: BAFTA awards 2023: ஜெர்மனி படத்திற்கு 7 விருது! விருதை கோட்டை விட்ட இந்திய இயக்குனர்!