பெற்றோர் அல்லது மாமனார் - மாமியருடன் வசிக்கும் அஸ்ஸாம் மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம், போங்கைகானில் இன்று (நவம்பர் 25) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய அவர், "ஜனவரி 8ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை.
அதனுடன் சேர்த்து அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்க முடிவுசெய்துள்ளோம். இதனால் புத்தாண்டில் அவர்கள் தங்கள் பெற்றோருடன் சிறிது நேரம் செலவிட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “பெற்றோர் உயிருடன் அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை உண்டு. அவர்கள் புத்தாண்டில் தங்கள் பெற்றோரைச் சென்று சந்திக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அஸ்ஸாம் அரசாங்கத்தின்கீழ் நியமிக்கப்பட்ட மத்திய அரசு அலுவர்களுக்கும் இந்த விடுமுறை அளிக்கப்படும்.
ஆனால், பெற்றோர் மாமினார்- மாமியார் இல்லாத ஊழியர்கள் இந்த இரண்டு நாள்கள் விடுமுறையைப் பெற முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒடிசாவில் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு!