கரிம்கஞ்ச் (அஸ்ஸாம்): அஸ்ஸாம் பாஜக ஏம்எல்ஏ காரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிய அலுவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெள்ளிக்கிழமை (ஏப்.2) அனைத்து தேசிய அரசியல் கட்சிகளிடமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து மறு மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ச்சியான ட்வீட்டுகளில் அவர், “பாஜகவைத் தாக்கி, ஒவ்வொரு முறையும் ஈ.வி.எம் தொடர்பான சம்பவம் வெளிச்சத்துக்கு வரும்போது, பாரதிய ஜனதா அதனுடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது” என்றார்.
அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏ கிருஷெண்டு பால் காரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அளித்துள்ள விளக்கத்தில், “லிப்ட் கேட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்றோம், அது எம்எல்ஏவின் கார் என்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் 4 பேரை தற்காலிக இடைநீக்கம் செய்து தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.