ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் நேபாளம் அணியை 3-க்கு 0 என்ற கணக்கில் இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி வீழ்த்தியது.
பராக் சித்தாலே, அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஆகிய இந்திய மகளிர் அணி நேபாளம் அணியை எதிர்கொண்டது. நேபாளத்தின் சிக்கா ஷ்ரேஸ்தாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை தியா ஒரு நிமிடத்தை கூட வீணடிக்காமல் தனது ஆதிக்கத்தை ஆட்டம் முழுவதும் வெளிப்படுத்தினார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் 11-க்கு 1 என்ற புள்ளிகளில் முதல் செட்டை ஆட்டத்தை கைப்பற்றினார். மேலும் தன்னம்பிக்கையோடு ஆட்டத்தை தொடர்ந்த அவர், 11-க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார். மூன்றாவது ஆட்டத்தில் விரைந்து இந்தியாவை முன்னிலைப்படுத்தும் நோக்கில் தியா 11-8 என்ற கணக்கில் வெற்றியை தக்கவைத்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அய்ஹிகா 11-க்கு 3, 11-க்கு 7, 11-க்கு 2 என்ற கணக்கில் நேபாள வீராங்கனை நபிதாவை வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற 3வது டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சுதீர்தா, நேபாள வீராங்கனை எவானா தாபா மகரை 8-க்கு 0, 11-க்கு 5 மற்றும் 11-க்கு 2 என்ற கணக்கில் வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி நேபாளத்தை 3-க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: ஐசிசி உலகக் கோப்பை 2023 பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?