கொல்கத்தா: அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் (FIDE World Cup Chess Tournament) டைபிரேக்கர் முதல் சுற்றில் 1-0 என்ற கணக்கில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) வெற்றி பெற்றார். அதன்பின் நடைபெற்ற இரண்டாம் மற்றும் இறுதி சுற்றில் 0.5 - 0.5 என்ற கணக்கில் நிறைவு பெற்றது. இதனால், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 6வது முறையாக கார்ல்சன் வென்றார். இருந்த போதும், இறுதி வரை போரடிய பிரக்ஞானந்தாவுக்கு (R Praggnanandhaa) பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், முன்னாள் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்தனர். தற்போது ஹாங்சோவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட இந்திய செஸ் அணி தயாராகி வருகிறது.
ஆசிய செஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஆடவர் செஸ் அணியின் சார்பாக உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜி.எம். ரமேஷ்பாபு, பிரக்ஞானந்தா மற்றும் காலிறுதிப் போட்டியாளர்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் நான்கு நாள் முகாமில் கலந்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் கார்ல்சன்.. இறுதி வரை போராடிய பிரக்ஞானந்தா!
கிராண்ட்மாஸ்டர்கள் விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி மற்றும் ஆர்.குகேஷ், மூத்த வீரர் பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் ஹாங்சோவுக்குச் செல்லும் ஆண்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டிகளில் தலைமைப் பயிற்சியாளர் புகழ்பெற்ற ஜி.எம்.போரிஸ் கெல்ஃபாண்ட் தலைமையிலான அணியில் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணன், உதவிப் பயிற்சியாளர்கள் வைபவ் சூரி மற்றும் அர்ஜுன் கல்யாண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். செஸ் போட்டிகளுக்கான பெண்கள் பயிற்சி முகாம் வரும் ஆக.29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி, வைஷாலி ரமேஷ்பாபு, வந்திகா அகர்வால் மற்றும் சவிதா ஸ்ரீ பி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF) தலைவர் சஞ்சய் கபூர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 'நமது செஸ் வீரர்களுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆதரவு மற்றும் பயிற்சிகளை முழுமையாக வழங்கி வருகிறோம். இந்த பயிற்சி முகாம் செஸ் வீரர்களுக்கு அதிவேக அனுபவத்தையும் நுணுக்கங்களையும் உத்திகளையும் கற்றுத்தருவதோடு ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களின் திறன்களை மேம்படுத்தும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த பயிற்சி முகாம் ஐந்தாவது பதிப்பாக டாடா ஸ்டீல் செஸ் இந்தியா ரேபிட் அண்ட் பிளிட்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறும். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் போட்டியில் பங்கேற்கின்றனர் மேலும் முன்னாள் உலக பிளிட்ஸ் சாம்பியனான மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் நடப்பு உலக சாம்பியனான வென்ஜுன் ஜூ ஆகியோர் பங்கேற்கின்றனர்' என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “நம்பர் 1 உடன் அவர் விளையாடியதே முக்கியம்” - பிரக்ஞானந்தாவின் தந்தை, சகோதரி நெகிழ்ச்சி!