மும்பை: சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆரியன் கான், ஆர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா உள்பட எட்டு பேரை நேற்று முன்தினம் (அக். 2) போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (NBC) விசாரணையில் எடுத்தனர்.
இதையடுத்து, ஷாருக்கான் மகன் ஆரியன் கான், ஆர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் நேற்று (அக். 2) மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
காவல் நீட்டிப்பு
பின்னர், இம்மூவர் மீதும் போதைப்பொருள் வைத்திருந்தன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானார்கள். மேலும், நேற்று மாலை அவர்கள் விடுமுறைக்கால நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒருநாள் காவலில் எடுக்கப்பட்டனர்.
இதனால், ஆரியன் கான் தரப்பில் இன்று (அக். 4) பிணை மனு தாக்கல் செய்யப்படலாம் எனக்கூறப்பட்டது. இந்நிலையில், ஆரியன் கான், ஆர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகிய மூவரும் இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருதரப்பு வாதம்
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் அனில் சிங்," ஆரியன் கான் ஒரு அழைப்பின் பேரில்தான் அந்த கப்பலுக்கு சென்றுள்ளார். அவர் போதைப்பொருள் வைத்திருந்தவர்களுடன் ஆரியன் கான் இருந்தார்.
ஆரியன் கானுக்கும் போதைப்பொருள் தொடர்புடைவர்களுக்கும் இடையே செல்ஃபோன் உரையாடல் (Chats) இருந்துள்ளது. அதனால், போதைப்பொருள் விநியோகித்தவர்களை கண்டறிய இவர்களை விசாரணை காவலில் எடுக்க வேண்டும்" என்றார்.
ஆரியன் கான் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்,"ஆரியன் கானிடம் இருந்து எந்தவித போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை. போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க அவர் தயாராகவுள்ளார். எனவே அவருக்கு பிணை கொடுப்பதில்லை சிக்கல் இல்லை.
மேலும், அவருடன் இருந்தவர்களிடம் இருந்துதான் போதைப்பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதற்கும் ஆரியன் கானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்றார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், மூவரின் காவலை வரும் அக்டோபர் 7ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷாருக்கானின் மகன் உள்பட மூன்று பேரை இரண்டு நாள்கள் காவலில் வைக்க கோரிக்கை...