ETV Bharat / bharat

பிணைக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள அர்னாப்! - மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை : சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, பிணைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பிணைக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள அர்னாப் !

author img

By

Published : Nov 10, 2020, 3:35 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக்(வயது53). இவருக்கு கட்டட உள்வடிவமைப்பு பணிகள் செய்ததற்கான நிலுவை தொகையை ரிபப்ளிக் டி.வி. ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி(47) வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடன் தொல்லை மற்றும் அர்னாப் பக்கத்திலிருந்து வந்த கொலை அச்சுறுத்தல் காரணமாக மனமுடைந்த அவர் கடந்த 2018ஆம் ஆண்டு அன்வய் நாயக் அலிபாக்கில் உள்ள வீட்டில் தாயுடன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி இருந்த இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க காவல் துறையினருக்கு மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதியன்று அதிகாலை அலிபாக் காவல்துறையினர் மும்பை லோயர் பரேலில் உள்ள அர்னாப் கோஸ்வாமியின் வீட்டுக்கு சென்று, கட்டட வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயாரைத் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பெரோஸ் ஷேக், நிதேஷ் சர்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் மூவரும், தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, எம்.எஸ் கார்னிக் ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் மூவருக்கும் இடைக்கால பிணை வழங்க மறுத்துவிட்டது. அத்துடன், பிணையைப் பெற கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.

இதனையடுத்து, அர்னாப் கோஸ்வாமி தன்னை பிணையில் விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்து தனது வழக்குறிஞர் நிரிணிமேஷ் துபே மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.