டெல்லி: இந்திய ராணுவத்தில் 'அக்னிவீரர்' ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பாணையை இந்திய ராணுவம் இன்று (ஜூன் 20) வெளியிட்டது.
அதன்படி ராணுவத்தில் 'அக்னி வீரர்களாக' பணியாற்ற விரும்புபவர்கள் ஜூலை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவு கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ராணுவ அக்னி வீரர்களுக்கென பிரத்யேக ரேங்க் உருவாக்கப்படும். இது தற்போதுள்ள ராணுவ ரேங்க்குகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். அக்னி வீரர்கள் எந்தப் படைப்பிரிவுக்கு வேண்டுமானாலும் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அக்னிபத்' கடற்படை, விமானப்படை ஆள்சேர்ப்பு அறிவிப்பு எப்போதுதெரியுமா?: மேலும், 'அக்னிபத்' திட்டத்தின்கீழ் கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு ஜூன் 21 மற்றும் ஜூன் 24 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அக்னிபத் திட்ட ஆள்சேர்ப்பு - விதிமுறைகள், நிபந்தனைகள் என்னென்ன...?