இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே அடுத்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு நான்கு நாள்கள் பயணம் செல்கிறார். அங்கு இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
கடந்த மாதம் நேபாளம் நாட்டுக்குச் சென்ற நரவணே, அந்நாட்டு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி, பிரதமர் சர்மா ஓலி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், அந்நாட்டு ராணுவ மருத்துவமனைக்குத் தேவையான எக்ஸ்-ரே மிஷின் உள்ளிட்ட பல்வேறு மருந்துப் பொருள்களை நரவணே வழங்கினார்
அப்போது, ராணுவத் தளபதி நரவணேவுக்கு ‘நேபாள ராணுவத் தளபதி’ என்ற கௌரவ பதவியை ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல்: அடித்து துவம்சம்செய்த பாஜக!