கடந்த 8ஆம் தேதி குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட அதில் பயணம் செய்த அனைவரும் மரணம் அடைந்தனர்.
இந்த நிலையில், அடுத்த முப்படைத் தலைமைத் தளபதி யார் என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலானோர் ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணேவே அடுத்த முப்படைத் தலைமைத் தளபதியாகத் தேர்வுசெய்யப்படுவார் எனக் கருத்து தெரிவித்துவந்தனர்.
இந்த நிலையில், நரவணேவை முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் அடுத்த முப்படைத் தலைமைத் தளபதி நியமிக்கப்படும்வரை இப்பொறுப்பில் நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவர் பதவி தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இது முப்படைத் தலைமைத் தளபதியின் அதிகாரங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஏழு ஆண்டுகளில் அணு மின் உற்பத்தி 40% உயர்வு - அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்