டெல்லி : நாட்டின் ராணுவ தலைமை தளபதி எம்எம் நரவனே 5 நாள்கள் பயணமான ஞாயிற்றுக்கிழமை (நவ.14) இஸ்ரேல் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்தப் பயணத்தின்போது எம்எம் நரவனே, இஸ்ரேல் நாட்டுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேசுவார். முன்னதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் ஆகியோர் இஸ்ரேல் சென்று இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் எம்எம் நரவனேயின் பயணம் அமைந்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் வெளியான செய்திக் குறிப்பில், “ராணுவ தலைமை தளபதி எம்எம் நரவனே இஸ்ரேலுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் ராணுவத் தளபதி ஆய்வு