ETV Bharat / bharat

மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற நபர் - கொல்கத்தாவில் பரபரப்பு! - ஆயுதங்களுடன் மம்தா வீட்டில் நுழைய முயற்சி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், மர்மநபர் ஒருவர் ஆயுதங்களுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Armed man
மம்தா
author img

By

Published : Jul 21, 2023, 5:11 PM IST

மேற்குவங்கம்: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீடு, கொல்கத்தாவில் காளிகாட் பகுதியில் உள்ளது. இந்த நிலையில், இன்று(ஜூலை 21) பிற்பகலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டிலிருந்தபோது, 'Police' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்று, அவரது வீட்டிற்குள் நுழைய முயற்சித்தது. மம்தாவின் வீடு உள்ள ஹரிஷ் சாட்டர்ஜி தெருவுக்குள் வேகமாக வந்து, அவரது வீட்டிற்குள் நுழையச் சென்றது. அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் காரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர், காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் தனது பெயர் நூர் ஆலம் என்றும், தான் முதலமைச்சர் மம்தா பானர்ஜியைச் சந்திப்பதற்காகவே வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாதுகாப்பு விதிகளை மீறி முதலமைச்சரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கஞ்சா மற்றும் ஆயுதங்கள் இருந்ததாகவும் தெரிகிறது.

இது தொடர்பாகக் கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல் கூறும்போது, "காரில் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முதலமைச்சரைச் சந்திக்க விரும்பியதாகவும், அதற்காகவே இந்த செயலை செய்ததாகவும் கூறினார். அவரிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அவரிடம் எல்லை பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளின் அடையாள அட்டை இருந்தது. இது ஒரு தீவிரமான பிரச்சினை. அவரது உண்மையான நோக்கம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

கைது செய்யப்பட்ட நபரிடம், முதலமைச்சரின் பாதுகாப்புக்குப் பொறுப்பான சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், பிறகு அரை கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தியாகிகள் தின பேரணிக்குப் புறப்படுவதற்குச் சற்று முன்பாக இந்த சம்பவம் நடந்தது. இசட் (Z) பிரிவு பாதுகாப்பில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் மர்மநபர் அத்துமீறி நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது.

இதையும் படிங்க: Mamata Banerjee : நூலிழையில் உயிர் தப்பிய மம்தா பானர்ஜி.. என்ன ஆச்சு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.