ETV Bharat / bharat

மார்கதர்சி சிட்பண்ட் வழக்கில் வாதம் நிறைவு.. இடைக்கால தடை மீதான முடிவு நிறுத்தம்! - margadarsi chit fund case

margadarsi chit fund: மார்கதர்சி சிட்பண்ட் வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இடைக்கால உத்தரவுகள் மீதான முடிவை நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர்.

Margadarshi
Margadarshi
author img

By

Published : Aug 10, 2023, 1:12 PM IST

Updated : Aug 10, 2023, 1:31 PM IST

அமராவதி: மார்கதர்சி சிட்பண்ட் வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இடைக்கால உத்தரவுகள் மீதான முடிவை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி சிட் பதிவாளர் வெளியிட்ட பொது அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனம் தாக்கல் செய்த இரண்டு துணை மனுக்கள் மீதான விசாரணை நிறைவு பெற்றது.

அதேபோல் பிரகாசம் மாவட்டத்தில் சிட் குழுமம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவின் மீதான விசாரணை நிறைவு பெற்றதும், உச்ச நீதிமன்றத்தில் சிட்பண்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்பண்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசூர்யா தீர்ப்பு வழங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதன்கிழமை நடந்த விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஸ்ரீராம், அரசு சார்பில் அறிக்கைகளை தாக்கல் செய்தார். தொடர்ந்து வாதிட்ட அவர், சிட் குழுமத்தை முடக்கும் ஒரு தலைபட்சமான முடிவுகள் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை என்றும், முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து சிட் குழுவை தக்கவைப்பதற்கு ஆட்சேபனைகளை பெற பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் கூறினார்.

தாமாக முன்வந்து பொது அறிவிப்பு விடும் அதிகாரம் சிட் பதிவாளர்களுக்கு உள்ளது என்றும் அதற்கு எந்த தரப்பினரிடம் இருந்தும் புகார் மனுக்கள் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, உதவி மற்றும் துணைப் பதிவாளர்களுக்கு அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிட்பண்ட் சட்டத்தின் பிரிவு 48(H) கீழ், குழுக்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க துணைப் பதிவாளருக்கு சுய அதிகாரம் வழங்கப்பட்டு உளளதாக தெரிவித்தார்.

நோட்டீசுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். பிரகாசம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவில், சிட் குழுவுக்கு முதலில் தடை விதிக்க உத்தரவிடப்பட்டது, அதன் பிறகு, ஆட்சேபனை நோட்டீஸ் வாபஸ் பெறப்படும் என்றார்.

தொடர்ந்து சிட்பண்ட் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நாகமுத்து மற்றும் தமால்பட்டி ஸ்ரீநிவாஸ், உதவி பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் ஆகிய இருவருக்கும் வெவ்வேறு பணிகள் உள்ளதாக கூறினர். மேலும், உதவிப் பதிவாளர் ஆய்வு நடத்தி, துணைப் பதிவாளர் சிட் குழுக்களை தக்கவைத்ததற்கு எதிராக ஆட்சேபனை நோட்டீஸ்களை பெற்றது செல்லாது என்றும் மார்கதர்சி தரப்பில் வாதிடப்பட்டது.

ஒரு நீதிபதியின் வாதங்களைக் கேட்டு மற்றொரு நீதிபதி தீர்ப்பு வழங்கியது போல் அதிகாரிகளின் நடவடிக்கை இருந்ததாக இரு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். மார்கதர்சி சிட் நிறுவனம் பணத்தை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்படவில்லை என்று தெரிவித்தனர். அப்படியானால், சிட் குழுவைத் தடுக்க தானாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் ஆட்சேபனை கருத்துக்களை சமர்ப்பிக்க இந்த மாதம் 14-ஆம் தேதி வரை காலக்கெடு இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், அரசு வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு மூலம் நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த நோட்டீசின் அடிப்படையில் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : மார்கதர்சி சிட் குழுமங்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வாதம்

Last Updated : Aug 10, 2023, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.