வாரணாசி (உத்திரப்பிரதேசம்): வாரணாசியைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் முகமது ஆதிர் ஆகிய இருவரும் வெளிநாட்டில் பொறியியல் படித்து வந்தனர். தங்களது படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய இருவரும், திருட்டு மற்றும் பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒரு புதுமையான மொபைல் அப்ளிகேஷனை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின்படி, கடந்த ஒரு வருடமாக ஆய்வு மேற்கொண்டு ஒரு மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளனர். இந்த அப்ளிகேஷன் மூலம், மொபைல் திருடிய திருடனால் மொபைலை ஆஃப் செய்ய முடியாது. இதனால், மொபைல் இருக்குமிடம் தொடர்ந்து ஜிபிஎஸ் மூலம் தெரியவரும்.
மேலும், பெண்களின் பாதுகாப்பிற்காக, எப்போதெல்லாம் ஒரு பெண் கஷ்டத்தில் இருக்கிறாளோ, அப்போது இந்த அப்ளிகேஷனில் இருந்து அவர்கள் இருக்குமிடம் துல்லியமாக தெரியவரும். அந்த நேரத்தில் மொபைலின் பவர் பட்டனை மூன்று முறை அழுத்தினால் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் மொபைலுக்கு அவசரமான அழைப்பு (Emergency Call) மற்றும் இருப்பிடத்தின் தகவல் கிடைக்கும்.
இதுகுறித்து இளைஞர் அபிஷேக் கூறுகையில், “இந்த அப்ளிகேஷன் துல்லியமான விவரங்களைச் சொல்லும். மொபைலின் திருட்டுக்குப் பிறகு, உங்கள் மொபைல் சரியாக எங்கே உள்ளது என்பதை அறிய முடியும். இதனுடைய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது அலைபேசியை ஆஃப் செய்ய அனுமதிக்காது. இதை உருவாக்க எங்களுக்கு 1 ஆண்டு ஆனது. இந்த சமூகத்தில் மாற்றம் வர வேண்டும் எனவும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மொபைல் திருட்டைக் காப்பாற்ற முடியும் என்ற விருப்பத்தில்தான் இதனை உருவாக்கியுள்ளோம்” என்றார்.
தொடர்ந்து இளைஞர் முகமது ஆதிர் பேசுகையில், “இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு போனில் வேலை செய்யும். போன் தொலைந்தால் முதலில் இரண்டு முறை ஆஃப் செய்துவிடும். பின்னர், மொபைலை ஆன் செய்யும்போது, அப்ளிகேஷனில் உள்ள எண்ணில் தற்போதைய இடம் வந்துவிடும். அதன் பிறகு மொபைல் ஆஃப் ஆகாது. இந்த நேரத்தில், மொபைல் இருக்குமிடத்தின் தேதி, நேரம் ஆகிய தகவல்களை பெற முடியும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: லித்தியம் பேட்டரியில் இயங்கும் ஜீப்: இளைஞரின் புதிய முயற்சி