ஐதராபாத்: ஆப்பிள் நிறுவனம் இந்த மாத இறுதியில் iMac புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான M1 iMac மாடலை தொடர்ந்து இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் 24 இன்ச் கொண்ட iMac மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
ஆப்பிள் iMac அப்டேட் குறித்து டெக் வல்லுநர் குர்மன் கூறுகையில், ஆப்பிள் நிறுவனம் இந்த மாத இறுதியில் புதிய மேக் சம்பந்தப்பட்ட சீரிஸை வெளியிட திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார். மேலும், iMac 13 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் பிற உயர்நிலை புரோ மாடல்கள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை சந்தைக்கு வர வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு லிட்டர் நெய் ரூ.2 லட்சம்.. ஆண்டுக்கு ரூ.10 கோடி லாபம் ஈட்டும் விவசாயி!
நவம்பர் மாதத்தில் அப்பிள் நிறுவனத்தின் வருவாயை அறிவிப்பதுடன், நிறுவனம் பற்றிய மற்ற செய்திகளும் வெளிவரும் என அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், iPad உபயோகிப்பவர்களுக்கு ஆப்பிள் புதிய மற்றும் மலிவான விலையில் ஆப்பிள் பென்சிலிலை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதில் சிறப்பம்சமாக துல்லியமான பிக்சல், சாய்வு உணர்திறனை கொண்டுள்ளது. இந்த புதிய ஆப்பிள் பென்சில் மேட் ஃபினிஷ் மற்றும் ஐபாடை இணைக்கும் விதமாக தட்டையாக வடிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சார்ஜ் செய்வதற்கு USB-C கேபில்களையும் ஆப்பிள் நிறுவனம் இணைத்துள்ளது.
ஸ்பெஷல் விற்பனையாக மாணவர்களுக்கு 6 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் மற்றவர்களுக்கு 7 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஆப்பிள் நிறுவனம் விற்பனையை துவங்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் நவ.1 முதல் பிஎஸ் III, பிஎஸ் IV டீசல் வாகனங்களுக்கு தடை!