பெத்தன்செர்லா: ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியாலா மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து ஒன்று மோதி, அரை மணி நேரமாக காலில் நின்றதால், பெண் ஒருவர் வலி தாங்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நந்தியாலா மாவட்டத்தில் உள்ள பெத்தன்செர்லா பகுதியில் நேற்று கோவிந்தம்மா எனும் பெண், கொல்லா மத்திலெட்டி என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, திடீரென்று கர்னூலில் இருந்து புரோட்டூருக்குச் சென்ற அரசுப்பேருந்து அவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாகத் தெரிகிறது. மேலும், சம்பவத்தையடுத்து பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இதனால் கோவிந்தம்மாவின் கால் பேருந்தின் அடியில் சிக்கியதால், அரை மணி நேரம் கடுமையான வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. உடன் வந்தவரும் படுகாயம் அடைந்ததால், அரை மணி நேரத்திற்குப் பின்னர் கோவிந்தம்மா மீட்கப்பட்டு அருகில் உள்ள பொது சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விபத்தில் பெற்றோரை இழந்த 7 மகள்கள்; க்ரவுட் ஃபண்டிங் மூலம் கிடைத்த ரூ.1 கோடி