குவஹாத்தி: ராகுல் காந்தியின் அரசியல் நாகரிகம் கருத்து குறித்து ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சனம் செய்தார்.
இது குறித்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், "காங்கிரசில் உள்ள எவரும் அரசியல் நாகரிகம் குறித்துப் பேசக் கூடாது. அது (காங்கிரஸ்) ஒரு நிலபிரபுத்துவ அமைப்பு. அவரே (ராகுல் காந்தி) நிலபிரபுத்துவ கடவுள்.
ராகுல் காந்தி அரசியல் கண்ணியம் குறித்தெல்லாம் பேசக் கூடாது. ஆனால், நில பிரபுத்துவ கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அது குறித்து அவர் பேசலாம்" என ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: ராகுலுக்கு 'தமிழன்'ஆக அண்ணாமலையின் பதில் இதுதான்!