ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள டோமெயில் சவுக்கில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் முதலாவதாக குண்டு வெடிப்பு நடந்தது. இந்த நிகழ்வின்போது பேருந்து காலியாக இருந்தபோதிலும், அருகில் இருந்த இருவர் காயமடைந்தனர். இவர்கள் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து உதம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்தில் அடுத்த வெடிகுண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் ராணுவ வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குழுவினர் பேருந்து நிலையத்திற்கு வந்து சோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாக உதம்பூர் டிஐஜி சுலேமான் செளத்ரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதே ஜனநாயக ஆசாத் கட்சியின் நோக்கம் - குலாம் நபி ஆசாத்!