ETV Bharat / bharat

Odisha Train Accident: ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து.. தடம் புரண்ட சரக்கு ரயிலால் சேவை பாதிப்பு! - பார்கர் ரயில் விபத்து

ஒடிசா மாநிலம் பார்கர்(Bargarh) பகுதியில் இன்று சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மீட்பு பணிகளில் போலீசார், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Train
Train
author img

By

Published : Jun 5, 2023, 11:30 AM IST

Updated : Jun 5, 2023, 11:37 AM IST

பார்கர்க் : ஒடிசா மாநிலம் பார்கர் பகுதியில் இன்று(ஜூன் 5) சரக்கு ரயில் தண்டம் புரண்டு விபத்துக்குள்ளானது. கடந்த ஜூன் 2ஆம் தேதி பாலசோர் அருகே சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 275 பேர் இதுவரை உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்ட மக்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அதே ஒடிசா மாநிலத்தில் மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பார்கர் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • #WATCH | Some wagons of a goods train operated by a private cement factory derailed inside the factory premises near Mendhapali of Bargarh district in Odisha. There is no role of Railways in this matter: East Coast Railway pic.twitter.com/x6pJ3H9DRC

    — ANI (@ANI) June 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சரக்கு ரயிலின் பல பெட்டிகள் இந்த விபத்தில் தடம் புரண்டதாக கூறப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் ரயில் ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் விபத்து குறித்து முழுத் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Wrestlers meet Amit Shah : அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் சந்திப்பு... பிரிஜ் பூஷன் சிங் கைதா?

Last Updated : Jun 5, 2023, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.