ETV Bharat / bharat

கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்த பெண்மணிக்கு நேர்ந்த சோகம்!

author img

By

Published : Jun 1, 2022, 10:19 PM IST

கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்த பெண்மணிக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது மருத்துவ ஆணையத்தில் புகார் அளிக்கப்போவதாக பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்துள்ளார்.

Surgery
Surgery

கர்நாடகா: கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் (21), கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ததன் விளைவாக அண்மையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் பெங்களூருவில் பெண்மணி ஒருவர் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்து, பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றும் டெல்லியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார்.சிகிச்சை முடிந்த பத்து நாட்களுக்குப் பிறகு அவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சீழ் பிடித்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி அழுது கொண்டே வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு அதிகளவு வலி இருப்பதாகவும், இதுதொடர்பாக மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது யாரும் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வேறு ஒரு மருத்துவரை அணுகியபோது மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், தனது இந்த நிலைக்கு காரணமான மருத்துவர் குறித்து இந்திய மருத்துவ ஆணையத்தில் புகார் அளிக்கபோவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: கொழுப்பைக் குறைக்க ஆபத்தான ஆப்ரேஷன் - உயிரிழந்த நடிகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.