ETV Bharat / bharat

கர்நாடகாவில் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை - ஜெய் ஸ்ரீ ராம்

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம், கல்லூரிக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வாயிற்கதவை மூடும் காணொலிக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

அனுமதி மறுக்கப்படும் இஸ்லாமிய மாணவிகள்
அனுமதி மறுக்கப்படும் இஸ்லாமிய மாணவிகள்
author img

By

Published : Feb 4, 2022, 9:55 AM IST

உடுப்பி: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்லூரியில் ஹிஜாப் அணிந்திருக்கும் மாணவிகளை கல்லூரிக்குள் நுழையவிடாமல், கல்லூரியின் முதல்வர் தடுத்து நிறுத்தி வாயிற்கதவை மூடியுள்ளார்.

ஒரு மாததிற்கு முன்னதாக, உடுப்பி மாவட்டத்தில் வேறு ஒரு கல்லூரியில் இதே போன்று ஹிஜாப் அணிய கல்லூரிக்குள் தடைவிதிக்கப்பட்டது. இத்தடையை எதிர்த்து மாணவிகள் இன்னும் போராடிவருகின்றனர். இந்நிலையில், இதேபோன்று ஒரு சம்பவம் உடுப்பியில், குந்தாபூர் பகுதியில் அமைந்திருக்கும் கல்லூரியில் நேற்று (பிப்ரவரி 3) நடந்துள்ளது.

கர்நாடகாவில் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை

கல்லூரிக்குள் ஹிஜாப் அணிவது தொடர்பான சம்பவம் குறித்து கர்நாடக மீன்வளத் துறை அமைச்சர் அனாகரா செய்தியாளரிடம் கூறுகையில், ”கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு குழு அமைக்கப்பட்டு இதில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரையில் இந்தத் தடை உத்தரவு தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், குந்தாபூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று (பிப்ரவரி 3) மாணவர்கள் சிலர் காவி நிறத் துணி ஒன்றை அணிந்துவந்து 'ஜெய் ஸ்ரீ ராம்' எனக் கோஷம் எழுப்பி ஹிஜாப் அணிவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: இஸ்லாமியர் என நினைத்து தாக்கிவிட்டனர் - சர்ச்சை கருத்தால் சஸ்பெண்டான காவலர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.