ETV Bharat / bharat

உ.பி.யில் உயிருக்கு போராடிய ஆமையை ஆப்ரேஷன் செய்து காப்பாற்றிய மருத்துவரும் உரிமையாளரும்! - ஆமையை காப்பாற்றிய மருத்துவர்

உத்தரப்பிரதேசத்தில் வளர்ப்பு ஆமையின் ஓட்டில் ஏற்பட்ட விரிசலை கால்நடை மருத்துவர் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து, ஆமையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 3, 2023, 11:04 PM IST

உ.பி.யில் உயிருக்கு போராடிய ஆமையை ஆப்ரேஷன் செய்து காப்பாற்றிய மருத்துவரும் உரிமையாளரும்!

உத்தரப் பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர், ஆமை ஒன்றின் ஓட்டில் அரிய அறுவை சிகிச்சை செய்து ஆமைக்கு உயிர் கொடுத்தார். இந்த ஆமைக்கு மூன்று வயது இருந்தபோது, உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. பின்னர் ஆமையை நாய் தூக்கிச் சென்றதில் அதன் ஓட்டில் விரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆமை நடப்பதில் சிக்கல் ஏற்பட்டு, ஓட்டில் ஏற்பட்ட விரிசலில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. ஆமையின் உடைந்த ஓடுக்கு இரும்புக்கம்பி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது பிரேஸ்கள் அல்லது ஸ்பிளிண்ட் என்று அழைக்கப்படுகிறது. இதுபொதுவாக வளைந்த பற்களைக் கட்டப் பயன்படுகிறது.

இதுகுறித்து, உத்தரப்பிரதேச மாநிலம், காசிம்பூரில் வசிக்கும் ஆமையின் உரிமையாளர் சுதிர் கூறுகையில், 'கடந்த 3 ஆண்டுகளாக ஆமை ஒன்றை வளர்த்து வருகிறேன். நான், அன்புடன் டோட்டோ என்று அந்த ஆமையை அழைத்து வருகிறேன். ஒரு மாதத்திற்கு முன், உயரத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்பெட்டியில் இருந்து ஆமை கீழே விழுந்தது.

இதையடுத்து, அங்கிருந்த ஆமையை நாய் ஒன்று தூக்கி சென்றதால், ஆமை ஓட்டில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து விரிசல் ஏற்பட்ட இடத்தில், ஆமைக்கு தொற்று பரவியது. இந்த கடுமையான காயம் காரணமாக, ஆமை தண்ணீரில் நடக்கவும், நீந்தவும் சிரமப்படத் தொடங்கியது. எனவே, கால்நடை மருத்துவரிடம் எனது ஆமையைக் காட்டினேன்’’ என்றார். மேலும் இது குறித்து சுதிர் கூறுகையில், “ஆமையின் ஓடு அதன் உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது அதன் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆமை ஓட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான விரிசல் குறித்து ஆழமாக ஆய்வு செய்ததாக கால்நடை மருத்துவர் விராம் வர்ஷ்னே தெரிவித்தார். இதற்குப் பிறகு, ஆமை ஓடு அறுவை சிகிச்சைக்கு சிறப்பு பிரேஸ் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இது ஸ்பிளிண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

சுமார் 25 நாட்களுக்கு முன்பு, உடைந்த ஆமையின் ஓட்டிற்கு எஃகு கம்பிகள் மூலம் 3 மணிநேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவர் விராம் கூறினார். கால்நடை மருத்துவத்தில் அத்தகைய நுட்பம் இல்லை. ஆனால், வளைந்த பற்கள் கட்டப்பட்ட விதம், ஆமை ஓட்டை இணைக்க பிரேஸ் நுட்பம் பின்பற்றப்பட்டது.

ஆமையின் ஓடு இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டு, காயங்கள் விரைவில் ஆற மருந்துகள் கொடுக்கப்பட்டதாக மருத்துவர் விராம் கூறினார். 20 நாட்களுக்குப் பிறகு, ஆமை ஓட்டில் ஏற்பட்ட விரிசல் குணமாகியுள்ளது. ஆரோக்கியமாக இருந்த பிறகு, இப்போது ஆமை வசதியாக நடக்க ஆரம்பித்துள்ளது'' என்று தெரிவித்தார்.

என்ன தான், நாம் எவ்வளவு பெரியவராக ஆனாலும், நம் செல்லப்பிராணிகளுக்கு ஒரு வலி என்றால், அதை கிஞ்சித்தும் சகித்துக்கொள்ளமுடியாது என்பதற்கு, சுதிரின் இச்செயல் நமக்கு காட்டுகிறது.

இதையும் படிங்க: கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி: சிறுத்தையா என அச்சத்தில் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.