ETV Bharat / bharat

நாட்டின் அடுத்த முப்படைத் தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம் - career spanning over nearly 40 years

நாட்டின் அடுத்த முப்படைத் தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 28, 2022, 7:02 PM IST

Updated : Sep 28, 2022, 7:51 PM IST

டெல்லி: ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகானை முப்படைகளின் அடுத்த தலைமை தளபதியாக (சிடிஎஸ்) மத்திய அரசு நியமித்துள்ளது. அனில் சவுகான் இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் மரணமடைந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, நாட்டின் உயர்மட்ட ராணுவ அதிகாரியான ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகானை புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக மத்திய அரசு இன்று (செப்-28) நியமித்து இருக்கிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ராணுவம், கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், நாட்டின் ஒட்டுமொத்த இராணுவ வலிமையை உயர்த்துவதற்காகவும் இந்தியாவின் முதல் தலைமை தளபதியாக ஜெனரல் ராவத் நியமிக்கப்பட்டார்.

1999ஆம் ஆண்டு கார்கில் போருக்குப் பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைகளை ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, பாதுகாப்பு அமைச்சரின் இராணுவ ஆலோசகராக தலைமை தளபதியை நியமிக்க பரிந்துரை செய்ததையடுத்து ராவத் பொறுப்பேற்றார்.

ஜெனரல் ராவத் அவர் பதவி வகித்த இரண்டு வருடத்தில், முப்படைகளின் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த விரிவான அடித்தளத்தை மேற்கொண்டார். மேலும் முப்படைகளின் தலைமை தளபதி பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள இராணுவ விவகாரங்கள் துறையின் (DMA) செயலாளராகவும், பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ஆலோசகராகவும் பணியாற்றினார்

தற்போது ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலான அனில் சவுகானை அடுத்த தலைமைப் பாதுகாப்புப் பணியாளராக நியமித்துள்ளது. இதன் மூலம் அவர் இந்திய அரசாங்கத்தின் செயலாளராகவும் செயல்படுவார். மேலும் சவுகானின் இராணுவ விவகாரங்கள் துறை மீதான பொறுப்பேற்பு அதிகாரப்பூர்வ உத்தரவு வந்த பின் அமலுக்கு வரும்" என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சவுகான்?: லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் ஜம்மு & காஷ்மீர் மற்றும் வட-கிழக்கு இந்தியாவில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் விரிவான அனுபவம் பெற்றவர். அனில் சவுகான்1961 ஆம் ஆண்டு மே 18இல் பிறந்தவர்.

1981ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 11 கோர்க்கா ரைபிள்ஸில் பணியமர்த்தப்பட்டார். இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக்வாஸ்லா மற்றும் இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார்.

சவுகான் முன்னதாக, அங்கோலா நாட்டிற்கான ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் பணியாற்றினார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 31 அன்று இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய விஷயங்களில் அவர் தொடர்ந்து பங்காற்றினார்.

சவுகான் இராணுவத்தில் ஆற்றிய புகழ்பெற்ற சேவைக்காக, பரம் விசிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், சேனா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகிய பதக்கங்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புதிய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே!

Last Updated : Sep 28, 2022, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.