ETV Bharat / bharat

மணமகன் வாயில் குட்கா - பளார் விட்ட மணமகள் - delhi district news

திருமண சடங்கின் போது,குட்காவை மென்ற மணமகனை, மணமகள் கன்னத்தில் அறைந்தது சமூக வலைத்தளத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

angry-bride-slaps-groom-during-weddin-delhi

author img

By

Published : Aug 29, 2021, 12:32 PM IST

டெல்லியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில் திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திருமணத்தை நடத்தும் புரோகிதர் வாயில் குட்காவை வைத்து மென்று கொண்டே சடங்குகளைச் செய்துள்ளார்.

இதைக் கவனித்த மணமகளுக்குக் கோபம் தலைக்கேறி புரோகிதரை திட்டியுள்ளார்.பின்னர் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மணமகள் புரோகிதரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.

அப்போது, புரோகிதர் மணமகளிடம், மணமகனும் வாயில் குட்கா வைத்துள்ளார் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணமகள் மணமகனை கன்னத்தில் பளார் என அறைந்து தாலி கட்டும் நேரத்தில் குட்கா மென்று கொண்டு இருக்கிறாய். முதலில் அதைத் துப்பு என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, மணமகன் குட்காவை துப்பிய பிறகு திருமணம் நடைபெற்றது. இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : நீதிமன்ற வளாகம் முன் கத்தி குத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.