அமராவதி: ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் 13 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, அம்மாவட்டங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. அதனை, முதலமைச்சர் ஜெகன்மோகன் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஒன்றிணைந்த ஆந்திர பிரதேசம் இரண்டாக பிரிந்த நிலையில், இன்றைய தினம் ஆந்திரா வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கிராம, வார்டு செயலகங்களை அமைத்து அதிகாரப் பரவலாக்கத்திற்கு அம்மாநில அரசு முதலடியை எடுத்துவைத்துள்ளது. தற்போது, இந்த 13 புதிய மாவட்டங்களால், வருவாய் கோட்டங்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் நெல்லூர் முதலிடத்தில் உள்ளது. பிரகாசம் மாவட்டம் பரப்பளவில் மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாகும். இது 14,322 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது.
மாவட்டங்கள் விவரம்
புதிய மாவட்டம் | பிரிக்கப்பட்ட மாவட்டம் |
மாண்யம் | விஜயநகரம் |
அனக்காபள்ளி | விசாகப்பட்டினம் |
அல்லூரி சித்தாராம ராஜூ | விசாகப்பட்டினம் |
காகிநாடா | கிழக்கு கோதவரி |
கோனாசீமா | கிழக்கு கோதவரி |
எல்லூரு | மேற்கு கோதவரி |
பால்நாடு | குண்டூர் |
பாபட்லா | குண்டூர் |
நந்தியால் | கர்னூல் |
ஸ்ரீ சத்திய சாய் | அனந்தபூர் |
ஸ்ரீ பாலாஜி | சித்தூர் |
அன்னமயா | கடப்பா |
என் டி ராமா ராவ் | கிருஷ்ணா |
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் பெண்ணை முத்தமிட்டவருக்கு 7 ஆண்டுகள் கழித்து சிறை!