அமராவதி: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் - பால்சா விரைவு ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் இரு ரயில்களின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விஜயநகர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாகவும், பிற மாநிலத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். கண்டகப்பள்ளியில் ரயில் விபத்துக்குள்ளானதற்கு அவர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஆந்திர முதலமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "விபத்து சம்பந்தமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விபத்து நடந்த இடத்தை கல்வி அமைச்சர் பி. சத்யநாராயனா மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீட்பு பணியினை மேற்பார்வையிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
காயமடைந்தர்வகளுக்கு சிகிச்சை அளிக்க அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தார். இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்க்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்க்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
-
All injured shifted to hospitals.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ex-gratia compensation disbursement started - ₹10 Lakh in case of death,
₹2.5 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.
">All injured shifted to hospitals.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 29, 2023
Ex-gratia compensation disbursement started - ₹10 Lakh in case of death,
₹2.5 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.All injured shifted to hospitals.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 29, 2023
Ex-gratia compensation disbursement started - ₹10 Lakh in case of death,
₹2.5 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.
கண்டகப்பள்ளி ரயில் நிலைய பகுதியில் 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட கோர விபத்தில் இதுவரை 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரும் அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு! விபத்து நேரிட்டது எப்படி?