ETV Bharat / bharat

சந்திரபாபு நாயுடுக்கு நோட்டீஸ்! - நோட்டீஸ்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, குற்ற விசாரணை துறை (சிஐடி) அலுவலகத்தில் ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ap cid notices to chandrababu AP CID issued notices to former CM Chandrababu Naidu in Amaravathi lands scam Andhra CID issue notice to ex-CM in land scam case சந்திரபாபு நாயுடு நோட்டீஸ் அமராவதி

author img

By

Published : Mar 16, 2021, 3:01 PM IST

Updated : Mar 16, 2021, 4:37 PM IST

அமராவதி: ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்க அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். அமராவதியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நகரத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கம் ஆட்சி அமைந்தது. தொடர்ந்து ரெட்டி அதிகாரத்துக்கு வந்ததும் அமராவதியில் நிலங்கள் கையகப்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி பல்வேறு ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டன. மேலும், வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்றன.

இதற்கிடையில் அமராவதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்தவும் ஜெகன் மோகன் அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு தேசம் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் பொன்குரு நாராயணா ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட நிலங்களில் அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமல் வாங்கப்பட்ட நிலங்கள் குறித்து விசாணைக்கு ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணா!

Last Updated : Mar 16, 2021, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.