ETV Bharat / bharat

துப்பாக்கியுடன் போட்டோவுக்கு போஸ்: 10 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு... - துப்பாக்கி

பஞ்சாப்பில் துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதாக 10 வயது சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி கலாசாரம்
துப்பாக்கி கலாசாரம்
author img

By

Published : Nov 26, 2022, 9:32 AM IST

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் கையில் துப்பாக்கியும், கழுத்தில் புல்லட் பெல்ட் அணிந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் சிறுவனின் புகைப்படம் வைரலானது. ஆன்லைனில் வைரலான புகைப்படம், போலீசார் கண்களில் பட, பூபேந்திர்சிங் மற்றும் அவரது 10 வயது மகன் மீது துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் விசாரணையில், மகன் துப்பாக்கி மற்றும் புல்லட் பெல்ட அணிந்த புகைப்படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு பூபேந்தர் சிங் தன் முகநூல் புத்தகத்தில் பதிவிட்டு உள்ளார். ஏறத்தாழ 7 அண்டுகள் கழித்து புகைப்படம் வைரலான நிலையில், போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

மைனர் என்பதால் சிறுவன் குறித்த தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. கடந்த சில நாட்களாக பஞ்சாப்பில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கி கலாசாரம் ஊக்குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் பக்வத்மானின் உத்தரவை அடுத்து 10 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரவுடிகளுக்கு ஆப்பு: "டிராக் கேடி" செயலி தமிழ்நாடு காவல்துறை அறிமுகம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.