உத்தரப்பிரதேசம்: கோரக்பூர் மதன் மோகன் மால்வியா பல்கலைக்கழகம் எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் மாணவர்கள் இயற்கை சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத ட்ரோனை (biodegradable drone) தயாரித்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படும் மட்கும் பொருளான பாலி லாக்டிக் அமிலத்திலிருந்து ட்ரோன் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த ட்ரோன் தேசிய அளவில் நடைபெற்ற நடமாடும் பொருட்கள் போட்டியில் பாராட்டப்பட்டது.
இது ஒரு நேரத்தில் 5 கிலோமீட்டர் சுற்றளவினைக் கண்காணிக்க முடியும். அதன் உடல் பாலி லாக்டிக் அமிலத்தால் ஆனது என்று ஆராய்ச்சிக் குழுத் தலைவர் விவேக் சுக்லா விளக்குகிறார். அதன் பிறகு 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ட்ரோன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கட்டுமானத்தின் முழு செயல்முறையும் பல்கலைக்கழகத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான உபகரணங்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டுள்ளன.
ஆய்வுக் குழுவைச் சேர்ந்த பியூஷ் திரிபாதி கூறுகையில், ’ஆளில்லா விமானத்தை தயாரிப்பதில், அதன் பேட்டரியில் இருந்து, பறக்கும் போது காற்றழுத்தத்தை தாங்கும் கருவியின் அமைப்பு தயார் செய்யப்படுகிறது. இது மட்கும் தன்மை கொண்டது மற்றும் இந்த ட்ரோன் முழுமையாக செயல்படும்’ என்றார்.
அதேபோல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை பேராசிரியருமான சஞ்சய் குமார் சோனி, இந்த சாதனை தற்போதைய காலகட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வர்ணித்துள்ளார்.
மேலும் அவர் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பொருட்கள் விலை உயர்ந்ததாகவும், எந்தவொரு சாதனத்தையும் தயாரிப்பதற்கு அதிக பணம் செலவழிக்கப்படுவதாகவும் உள்ளது என்றார். அந்த நேரத்தில், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத ஆளில்லா ட்ரோன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும்; மற்ற தொழில் நுட்பங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் பல்வேறு துறைகளில் சமுதாயத்திற்கு பெரும் நன்மை கிடைக்கும்.
இதையும் படிங்க: 'தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு' - ஆளுநர் தமிழிசை பகீர் புகார்!