ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகளுக்கு பாஜக குறி!

பிகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து அமித் ஷாவின் கண்கள் மேற்கு வங்கம் நோக்கி திரும்பியுள்ளன. அங்கு 200 சட்டப்பேரவை தொகுதிகளை கைப்பற்றும் வகையில், “மிஷன் 200” திட்டத்தை பாஜக முன்னெடுத்துள்ளது.

Formula 23 Amit Shah Mission 200 in West Bengal West Bengal மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகளுக்கு பாஜக குறி பார்முலா 23 மிஷன் 200 மேற்கு வங்கம் அமித் ஷா

author img

By

Published : Nov 19, 2020, 10:06 AM IST

கொல்கத்தா: மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தை கைப்பற்றும் வகையில் அமித் ஷா, “பார்முலா 23” அறிமுகப்படுத்தியுள்ளார்.

அது என்ன பார்முலா 23 என்று பார்க்கலாம். அதிலுள்ள முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

  1. தொழிலாளர்கள், தொண்டர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் நமோ செயலியை பதிவிறக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அளிக்கும் செய்திகள் மற்றும் திட்டங்களை அறிந்துகொள்ள வேண்டும்.
  2. தொகுதிகளை மண்டல வாரியாக ஏபிசிடி எனப் பிரிக்க வேண்டும். அதில் டி பிரிவில் தொண்டர்களும், சி பிரிவில் கட்சி நிர்வாகிகளும் கவனம் செலுத்த வேண்டும். தொண்டர்கள், ஆதரவாளர்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல்களை மாநில தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும்.
  3. பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியை மக்கள் கேட்கும் வகையில் குறைந்தது ஆறு நிகழ்ச்சிகளாவது நடத்த வேண்டும்.
  4. ஒவ்வொரு வாக்கு சாவடி குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனை அடிப்படை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  5. ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களுடன் பாஜகவினர் தொடர்பில் இருக்க வேண்டும்.
  6. நரேந்திர மோடி அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களால் பயன்பெறும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் பாஜக தொண்டர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.
  7. பாஜக கட்சியின் சின்னமாக தாமரை, மக்கள் அதிகம் கூடும், அதேநேரம் வாக்குச் சாவடி அருகேயுள்ள ஐந்து இடங்களில் வைக்கப்பட வேண்டும்.
  8. ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும்.

2014 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறியப்படும் நேரத்தில் அமித் ஷா, உத்தரப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது பாஜக மிகப்பெரிய அளவிலான வெற்றியை வரலாற்றில் பதிவு செய்தது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகளுக்கு பாஜக குறி வைத்துள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம்: தமிழ்நாட்டுக்கு வருகிறார் அமித் ஷா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.