காந்திநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் குஜராத்தை பார்வையிட உள்ளார்.
அப்போது, சாந்தேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் (எஸ்.ஜி.சாலை) காந்திநகர் அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள வைஷ்ணோதேவி, கோராஜில் ஆகிய இரண்டு மேம்பாலங்களை உள்துறை அமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு மேம்பாலங்களும் எஸ்ஜி சாலையில் போக்குவரத்தை வெகுவாகக் குறைக்கும். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, துணை முதலமைச்சர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அவரது நாடாளுமன்றத் தொகுதியான காந்திநகரில் உள்ள போடக்தேவ், ஆதர்ஷ் சன்சாத் கிராம் திட்டத்தின்கீழ், ஷா தனது தத்தெடுக்கப்பட்ட கிராமங்களான கொலவாடா, ரூபால் ஆகிய இடங்களுக்கும் சென்று பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பூசி மையங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
மேலும், ரூபாலில் உள்ள சக்திபீத் வர்தாயினி மாதா கோயிலுக்கு அவர் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: உ.பி.யில் தளர்வு, கோவாவில் நீடிப்பு