நாட்டில் நக்சல் இயக்க பாதிப்பு அதிகமுள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பிற்காக மாநில முதலமைச்சர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் டெல்லி சென்றுள்ளனர்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இக்கூட்டத்தில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்ட ஒழுங்கு நிலை, வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் அதிகளவில் நக்சல் தாக்குதல் தலைதூக்க தொடங்கியுள்ளதால், அம்மாநிலத்திற்கு கூடுதல் கவனம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தின்போது மேற்கூறிய மாநிலங்களில் பாதிப்பு அதிகம் கொண்ட மாவட்டங்களை கண்டறிந்து, அங்கு பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதுடன், அடிப்படை கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துருவ் குண்டு: 12 வயதில் நாட்டுக்காக வீர மரணமடைந்த சிறுவன்