ETV Bharat / bharat

அடுத்த மூவ் என்ன? ஆளுநரை சந்திக்கிறார் எடியூரப்பா! - karnataka latest news

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் அடுத்த மூவ் தொடர்பாக அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

BSY
BSY
author img

By

Published : Jul 26, 2021, 12:06 PM IST

Updated : Jul 26, 2021, 12:24 PM IST

பெங்களூரு : முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக எடியூரப்பா அறிவித்துள்ள நிலையில் மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை (Thavar Chand Gehlot) இன்று (ஜூலை 26) சந்திக்கிறார்.

இது தொடர்பாக வெளியான தகவலில் எடியூரப்பா ஆளுநர் சந்திப்பு மதியம் 2 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சராக இரண்டு ஆண்டுகளை எடியூரப்பா பூர்த்தி செய்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி விதான் சவுதாவில் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெற்றது.

காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற எடியூரப்பா உரையாற்றினார். அதன்பின்னர், தனது ராஜினாமா முடிவை தெரிவித்தார். இந்நிலையில் மதியம் மாநில ஆளுநரை எடியூரப்பா சந்திக்கிறார்.

முன்னதாக 79 வயதான எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போகிறார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில் எடியூரப்பா- ஆளுநர் சந்திப்பு யூகங்களை அதிகரித்திருந்தது. இதற்கிடையில் எடியூரப்பாவின் அறிவிப்பு யூகங்களை உறுதியாக்கியுள்ளது.

Last Updated : Jul 26, 2021, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.