புதுச்சேரி: அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்தவர் மரியா(64) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ளார். புதுச்சேரியில் மூன்று நாள்கள் தங்கி சுற்றிப்பார்த்துள்ளார். இதனிடையே புஸ்சி வீதியில் உள்ள ஒரு கலைப்பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளர் ராகுல் (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதுது.
இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பின் மரியா தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்ய சென்றார். இடையில் இருவரும் போனில் பேசிக்கொண்டனர். இவர்களின் நட்பு ஆழமானது. இந்நிலையில் மரியா புதுச்சேரிக்கு வந்து, சந்திப்பதாக தெரிவித்தார். ராகுலும் அவரை சந்திப்பதாக ஒப்புக்கொண்டார்.
கடந்த வாரம் சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மரியா தங்கினார். அன்றிரவு ராகுலை அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதன்பின் மரியா ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது உறுப்பில் காயமிருந்துள்ளது.
இதையடுத்து ஜிப்மர் மருத்துவர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தப்பியோடிய ராகுலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி 17 வயது சிறுவன் கடத்தல்.. போக்சோவில் 33 வயது பெண் கைது..