உத்திரப்பிரதேசம்: திருமண வழக்குகள் பெரும்பாலும் மிகைப்படுதப்படுவதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்திய சட்டப்பிரிவு 498ஏ பிரிவின் கீழ் பதிவாகும் பெரும்பாலான வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பலமடங்கு மிகைப்படுத்தப்படுவதால் அனைத்து திருமண வழக்குகளிலும் வழக்குப் பதிவு செய்தவுடன் யாரையும் கைது செய்யகூடாது, என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு மாதம் கெடு முடிந்தப் பின்னரே கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. குடும்ப நல ஆணையம் இந்த இரண்டு மாத காலத்தில் வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராகுல் சதுர்வேதி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் திருமண வழக்குகள் மீதான எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டவுடன், காவல்துறை வழக்கை குடும்ப நல ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு குடும்ப நல ஆணையம் வழக்கை தீர விசரித்து காவல்துறையிடமும் மாஜிஸ்திரேட்டிடமும் அறிக்கை சர்பிக்க வேண்டும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகியோர் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வரதட்சனை கொடுமை வழக்கினால் பாதிக்கப்படதாக தனிதனியாக சீராய்வு மனுக்களை தாக்கல் செய்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் இந்த உத்தரவைு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்க்தக்கது. .
இதையும் படிங்க: திருச்சியில் திகிலூட்டும் மர்ம பங்களா!